ஆய்வுகளுக்கு உயிர்கொடு
நீங்கள் ஆய்வுகளை ( Labs) தொடங்கவேண்டுமா ? இது ஒரு சில உடனடி சொடுக்குகளிலேயே சாத்தியமாகும் . (இஞ்)சிமெயிலுக்குள் ( Gmail) உள்நுழைந்து கொள்க . அதன் பின் (இஞ்)சிமெயில் பக்கத்தில் வலது மேற்புறத்தில் உள்ள அமைப்புகள் ( Settings) என்பதனை சொடுக்குங்கள் . அதில் ஆய்வுகள் ( Labs) என்ற சீட்டை ( tab) தேர்ந்தெடுத்து பின் அதில் எந்த ஆய்வுகளுக்கு உயிர்கொடுப்பது ( enabling) என்பதினை தீர்மானியுங்கள் . நீங்கள் தேர்வு செய்த ஆய்வுகளுக்கு நேர்முன்னே உள்ள உயிர்கொடு ( enable) என்ற பொத்தானை அமுக்கி விடுங்கள் . பிறகு அந்த பக்கத்தின் கீழே சென்று மாற்றங்களை சேமி ( Save Changes) என்ற பொத்தானை சொடுக்குங்கள் . உங்கள் பக்கம் புதுப்பிக்கப்படும் ( Refresh) . அவ்வாறு புதுபிக்கப்பட்ட பின் நீங்கள் உயிர்கொடுத்த ஆய்வுகளை நீங்கள் உபயோகிக்கலாம் .
thalaivaa, rompa palaiya thakavala irukkae.
ReplyDelete